மீனாவை எப்பொழுது என் கணவர் சைட் அடிப்பார் – குஷ்பூ கலகல !

குஷ்புவின் கணவரன், ஹியூமர் படங்களின் இயக்குநருமான சுந்தர் சி, நிறைய ஹீரோயின்களை இயக்கியிருந்தாலும் கூட அவருக்கு மிக பிடித்தமான ஹீரோயின்கள் லிஸ்டில் முதலில் இருந்தவர் மீனா ‘அந்தப் பொண்ணு ஸ்பாட்டில் இருந்தாலே அவ்வளவு லட்சுமிகரமா இருக்கும். என்று ஓப்பனாக ஒரு பேட்டியில் சிலாகித்திருந்தார்.இப்போது மீனாவுடன், சுந்தரின் மனைவி குஷ்பு இணைந்து ரஜினியின் ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஸ்பாட் அரட்டையில் இதை மீனாவிடம் ஓப்பனாக சொல்லி, ‘இப்பவும் அவரு உங்க சினிமாவை டி.வி.யில் பார்த்தால் உட்கார்ந்து உட்கார்ந்து சைட் அடிப்பாரு!’ என்று குஷ்பூ சொல்ல, மீனா செக்கச் சிவந்திருக்கிறார்.