மீம் மூலம் கலாய்த்த விவேக்!

ரசிகர்களால் சின்னக்கலைவாணர் என்றழைக்கப்படும் விவேக், நகைச்சுவையில் தனக்கென தனி வழி வகுத்து தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் விவேக். இந்நிலையில் நேற்று முன்தினம் கல்லூரிகள் திறக்கப்பட்ட முதல் நாள் என்பதால் மாணவர்கள் பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கொண்டாட்டத்தின் போது மாணவர்கள் பஸ்சின் கூரை மீது ஏறி ஆபத்தான முறையில் பயணம் செய்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஓட்டுனர் பஸ்சின் ப்ரேக்கை பிடிக்க, கூரை மீது இருந்த மாணவர்கள் அனைவரும் கீழே விழுந்தனர். இந்நிகழ்வு குறித்து சமூகவலைதளங்களில் பல்வேறு மீம்கள் பரவி வரும் நிலையில், இதுகுறித்து விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் மீம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதனை கனத்த இதயத்தோடு சிரித்துவிட்டு, இதனை யோசித்துப் பார்க்கலாம் என்றும் விவேக் தெரிவித்துள்ளார்.