மீரா மிதுனால்தான் நான் பிக் பாஸ் போகமுடியவில்லை புலம்பும் ஷாலு ஷம்மு !

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஷாலுஷம்மு ஆண் நண்பருடன் நெருக்கமாக நடனமாடிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்தது. அதிலிருந்து அம்மணி படு பரவி ஆகிவிட்டார். அதேபோல இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொள்ளப் போகிறார் என்ற சில செய்திகளும் பரவலாக பரவி வந்தது. ஆனால், இவர் இறுதியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு கொள்ளவில்லை. இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஷாலு சம்மு பேசுகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நானும் ஒரு போட்டியாளராக செல்ல வேண்டியதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் வேண்டியதாக பதிலாக மீரா மிதுன் சென்றுவிட்டார். மாடல் அழகியான மீரா மிதுன் பல்வேறு மோசடி வழக்கு சிக்கியுள்ளவர். மேலும் இவர் மாடலிங் துறையிலும் ஈடுபட்டு பல்வேறு பெண்களை ஏமாற்றியதாக அபிராமி தெரிவித்திருந்தார். அதற்கு முக்கிய காரணமே அவர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி பல வழக்குகளில் மாட்டிக்கொண்டு பரபரப்பாக பேசப்பட்டு வந்ததால் தான் அவரை தேர்வு செய்தனர்.  பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக உங்களை அழைத்தால் செல்வீர்களா என்ற கேள்விக்கு, கண்டிப்பாக செல்வேன் என்று பதில் அளித்த ஷாலு சம்மு என்று பற்றிய தவறான கருத்துக்கள் இருந்துகொண்டு வருகிறது அதனால் என்னை நிரூபிக்க நான் கண்டிப்பாக உள்ளே செல்வேன் என்று கூறியுள்ளார்.