முகெனுக்கு பல்கலை கழகம் அறிவித்த ஊடக சாதனையாளர் விருது!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமில்லாத பல போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் முகென், லாஸ்லியா, தர்ஷன் ஆகியோர் அடக்கம். இதில் முகென் தமிழ் ரசிகர்கள் சிலருக்கு தெரியவும் வாய்ப்பு இருகிறது. மலேசியாவை சேர்ந்த இவர், ஒரு ஹிப் ஹாப் பாடகராவார். இதுவரை மலேசியாவில் பல்வேறு இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். மேலும், இவருக்கென்று மலேசியாவில் ஒரு தனி ரசிகர் இவருக்கென்று இருக்கிறது. மேலும், இவர் தமிழிலும் ஒரு ஆல்பம் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இவர் சென்ற பிறகு இவருக்கு மலேசியாவில் மேலும் ஆதரவு கூடியுள்ளது. இந்த நிலையில் மலேசிய பல்கலை கழகம் நடத்திய தேசம் அச்சீவர் அவார்ட் அதாவது தேசம் ஊடக சாதனையாளர் விருது முகென் ராவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போதே முகென் ராவிற்கு இப்படி ஒரு பட்டம் கிடைத்துள்ளது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.