முகேனுக்கு கிடைத்த தளபதி வெறித்தனம் பெயர் பொறித்த டீ – ஷர்ட் !

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மலேசிய பாடகர் முகேனுக்கு பிகில் பட சிறப்பு பரிசு கிடைத்துள்ளது. விஜய் நடித்துள்ள பிகில் டிரெய்லர் வீடியோ கடந்த சனிக்கிழமை வெளியாகி விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாமல் பலரையும் கவர்ந்துள்ளது. இந்த டிரெய்லரை பாராட்டி திரையுலகில் பலரும் கருத்து தெரிவித்தனர். சமூக வலைத்தளங்கள் முழுவதும் பிகில் திரைப்படம் தொடர்பான செய்திகளையே ஆக்கிரமித்துள்ளது. இந்நிலையில், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிக்பஸ் வெற்றி போட்டியாளர் முகேனுக்கு பிகில் விஜய் புகைப்படம் மற்றும் தளபதி வெறித்தனம் என பெயர் பதிக்கப்பட்ட டீ சர்ட் பரிசான அளிக்கப்பட்டது.