முதன்முறையாக ரஜினி படத்திற்கு இசையமைக்கிறார் இமான் !

ரஜினி நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘தர்பார்’. மும்பையில் இதன் இறுதிகட்ட படப்பிடிப்பில் ரஜினி, நயன்தாரா இருவரும் தீவிரமாக இருக்கின்றனர். முழு படப்பிடிப்பும் அடுத்த வாரத்தில் முடிய உள்ளது. இதை தொடர்ந்து, இயக்குனர் சிவாவின் படத்தில் ரஜினி கவனம் செலுத்த உள்ளார்.  அந்த படத்தின் இறுதிகட்ட எழுத்து பணிகளில் சிவா தீவிரம் செலுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. சூர்யாவை வைத்து அவர் இயக்கும் படம் முடிந்த பின்னர் ரஜினி – சிவா படம் தொடங்க இருக்கிறது. ‘விஸ்வாசம்’ படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தனது அடுத்த படத்தின் இசையமைப்பையும் டி.இமானிடம் கொடுக்கலாம் என்பது சிவாவின் திட்டம். இதற்கு ரஜினி தரப்பும் சம்மதம் கூறியுள்ளது. இதையடுத்து, முதல்முறையாக ரஜினி படத்துக்கு டி.இமான் இசையமைக்க உள்ளார்.