முதன் முதலாக 2 வேடங்களில் அசத்தப்போகும் நயன்தாரா!
தமிழ் பட உலகின் ‘பிரபல’ கதாநாயகியான நயன்தாரா, முதன் முதலாக ஒரு படத்தில் இரு வேடங்களில் நடிக்கிறார், படத்தின் பெயர், ‘ஐரா.’ கே.எம்.சர்ஜுன் இயக்கவுள்ளார் இப்படத்தைப்பற்றி அவர் கூறியதாவது, “ஐரா” என்றால் யானை என்று அர்த்தம். இது ஒரு திகில் படம் “நயன்தாரா ஒரே நேரத்தில் பல படங்களில், பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்தாலும்,‘ஐரா’ படத்துக்கு அவர் கொடுத்த ஒத்துழைப்பும், முக்கியத்துவமும் சிறப்பானது. அவரின் இரு கதாபாத்திரங்களில் ஒரு கதாபாத்திரத்துக்கு கடுமையான உழைப்பு தேவைப்பட்டது. அதை அவர் சிறப்பாக செய்தார். அவரது உழைப்புதான், ‘தென்னிந்திய சினிமாவின் ராணியாக உருவாக்கி இருக்கிறது.” அவருடன் கலையரசன், யோகி பாபு, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தை கோட்டபாடி ஜே.ராஜேஷ் தயாரிக்க கதை-திரைக்கதையை பிரியங்கா ரவீந்திரன் எழுதியிருக்கிறார்” என்றார்.