முதலில் நாம் ஒழுக்கமாக இருக்க வேண்டும் – விஷாலை விமர்சித்த அருண்பாண்டியன்
சக்தி சிவன் எழுதி இயக்கி கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘தெளலத்’ இப்படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழாவில் நடிகர் அருண்பாண்டியன் கலந்துகொண்டு பேசினார் அவர் கூறியதாவது, விழாவில் நடிகரும் தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் பேசுகையில், பெரிய ஹீரோக்கள் நடித்த படம் மட்டும் பேசப்படும் சூழல் உள்ளது. சரியான கதையோடும் தரத்தோடும் நிறைய சின்னப்படங்கள் முடங்கிக் கிடக்கின்றன. அவையெல்லாம் வெளியில் வரவேண்டும். நடிகர் ஜீவா நடிகர் சங்கத்தைப் பற்றி மறைமுகமாக சொன்னார். நான் நேரடியாகவேச் சொல்கிறேன். விஷாலைப் பற்றி எனக்கு இப்போது தான் தெரியும். அயோக்யா படத்தின் தயாரிப்பாளர் எனது நண்பர். அவர் பட்ட கஷ்டங்களைப் பார்த்தேன். முதலில் நாம் ஒழுக்கமாக இருக்க வேண்டும். அதற்குப் பின் பதவிக்கு வரவேண்டும். இங்கு தயாரிப்பாளரைப் பிடிப்பது முக்கியமல்ல. தயாரிப்பாளரைக் காப்பாற்ற வேண்டியது தான் முக்கியம் என்றார்.