முதல்முறையாக சந்தானம் யோகி பாபு இணைந்து நடிக்கும் படம் !

டைரக்டர் ஷங்கரிடம் பல படங்களில் அசோசியேட் டைரக்டராக பணிபுரிந்த விஜய் ஆனந்த் கதை-திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டராக அறிமுகம் ஆகும் படம் 'டகால்டி'. சந்தானம் படத்தின் நாயகனாக தேர்வாகியுள்ளார். அவருக்கு ஜோடியாக பிரபல வங்காள பட நாயகி ரித்திகா சென் நடிக்கிறார். தெலுங்கு பட உலகின் பிரபல நடிகர் பிரம்மானந்தம், ராதாரவி, மனோபாலா, நமோநாராயணன், ஸ்டண்ட் சில்வா, சந்தானபாரதி, பிரபல இந்தி நடிகர் தருண் அரோரா ஆகியோரும் நடிக்கிறார்கள். சந்தானத்துடன் முதல்முறையாக யோகி பாபு இனைந்து நடித்துள்ளார். சந்தானம் தன கூட நடிக்கும் பெரிய கதாநாயகர்களையே கலாய்த்து விடுவார் தற்சமயம் யோகிபாபுவுடன் கூட்டணி அமைக்கும் பொது கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது.