முதல்முறையாக விஜய் சேதுபதி – அமலாபால் திரையில் இணையவிருக்கிறார்கள் !

பேராண்மை, புறம்போக்கு ஆகிய படங்களில் டைரக்டர் எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்த வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இந்த படத்தை இயக்குகிறார். இவர் கூறுகிறார், இது, விஜய் சேதுபதி நடிக்கும் 33-வது படம். படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. அடுத்த கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற இருக்கிறது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு, காதல், இசை என கொண்டாட்டங்களை உள்ளடக்கிய படம், இது. கதைக்குள் சர்வதேச அளவிலான பிரச்சினையும் இருக்கிறது. இதில் முதல் முறையாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அமலபால் இணையவிருக்கிறார். இதில், விஜய் சேதுபதி இசை கலைஞராக நடிக்கிறார். படத்திற்கு இன்னும் பெயரிடபடவில்லை. நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்க, மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்கிறார். இசக்கி துரை தயாரிக்கிறார்.