முதல்வரை சந்தித்த விஷால்

நடிகர் சங்க​ செயலாளர் மற்றும் தயாரிபாளர் சங்க​ தலைவருமான​ நடிகர் விஷால்,பிரகாஷ் ராஜ், அபிராமி ராமநாதன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சென்னை, தலைமை செயலகத்தில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.முதல்வரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விஷால், பைரசி பிரச்னை, ஐ.எஸ்.டி., மசோதா தொடர்பான விஷயங்கள், தியேட்டர்களில் கட்டணத்தை ஒழுங்குப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தோம். எங்களின் கோரிக்கையை பரிசீலிப்பதாக முதல்வர் கூறியிருக்கிறார்” என்று தெரிவித்தார்.