முதல் முறையாக மகளின் புகைப்படத்தை வெளியிட்ட – நடிகை ரேகா!

90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரேகா,‘கடலோர கவிதைகள்’ படத்தில் டீச்சராக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தற்போது குணச்சித்திர வேடங்களில் தொடர்ந்து நடித்து வரும் ரேகா, சமீபத்தில் வெளியான ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் ஹீரோ ஹரிஷ் கல்யாணுக்கு அம்மாவாக நடித்திருந்தார். இந்நிலையில், நடிகை ரேகா தனது ஒரே மகளின் புகைப்படத்தை முதல் முறையாக வெளியிட்டுள்ளார். நேற்று நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தனது மகளுடன் வாக்குப் பதிவு செய்த ரேகா, மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.