முத்தையா இயக்கத்தில் சூர்யா !

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா கைவசம் தற்போது பல படங்கள் உள்ளன. இதில் செல்வராகவன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள என்.ஜி.கே படம், மே இறுதியிலும் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் அவர் நடித்துள்ள காப்பான் படம், ஆகஸ்ட் இறுதியிலும், சுதா கொங்கரா இயக்கத்தில் அவர் நடித்துவரும் சூரரைப் போற்று படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரவுள்ளது. அடுத்ததாக சிவா இயக்கத்திலும் ஒரு படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். இது சூர்யா நடிக்கும் 39-வது படமாகும். சூர்யா இன்னொரு படத்திலும் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்.மருது, கொம்பன் என தொடர்து சாதிய பின்புலத்தில் படம் இயக்கி சர்ச்சையை ஏற்படுத்திய முத்தையாவின் இயக்கத்திலும் சூர்யா ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்.