முத்தையா முரளிதரனுக்கு நன்றி தெரிவித்த விஜய் சேதுபதி !

தான் நடித்து வரும் படங்களின் படப்பிடிப்பு அனைத்தையும் முடித்துவிட்டு, முத்தையா முரளிதரன் பயோபிக்கில் கவனம் செலுத்தவுள்ளார் விஜய் சேதுபதி. இதன் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப் பட்டு, 2020ம் ஆண்டு இறுதியில் வெளியிடலாம் என இப்போதைக்கு முடிவு செய்துள்ளது படக்குழு. முத்தையா முரளிதரன் பயோபிக்கில் நடிக்கவுள்ளது தொடர்பாக விஜய் சேதுபதி கூறுகையில் “தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த, சர்வதேச அளவில் முத்திரை பதித்த முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பது பெருமையாக இருக்கிறது. முரளிதரனின் கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்குச் சவாலாக இருக்கும். அதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன். முரளியே இந்த படத்தில் இணைந்து பணியாற்றி, கிரிக்கெட் குறித்து என்னை வழிநடத்தவுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. என் மீது நம்பிக்கை வைத்ததற்கு, முரளிதரனுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி. தற்போது இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.