முத்த காட்சியில் நடித்து சர்ச்சையில் சிக்கிய நாகார்ஜுனா !

தமிழில் ‘ரட்சகன்’ படத்தில் நடித்துள்ள நாகார்ஜுனா தெலுங்கில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். இவருக்கு 59 வயது ஆகிறது. தற்போது ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் ‘மன்மதடு-2’ படத்தில் நடிக்கிறார். இதில் கதாநாயகிளாக ரகுல்பிரீத் சிங், அக்‌ஷரா கவுடா நடிக்கின்றனர். இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. டிரெய்லரில் ஒரு பெண்ணுக்கு நாகார்ஜுனா உதட்டோடு உதடு சேர்த்து முத்தம் கொடுப்பதுபோன்ற காட்சி இடம்பெற்று உள்ளது. அந்த நடிகையின் முகம் தெரியவில்லை. மகள் வயது பெண்ணுடன் முத்த காட்சியில் நடிக்கலாமா? இந்த வயதில் முத்த காட்சி தேவையா என்று கோபத்தில் கண்டித்து வருகிறார்கள். முத்த காட்சி வீடியோவும் நாகார்ஜுனாவை கண்டிக்கும் விவாதமும் வலைத்தளத்தில் வைராகி உள்ளது.