முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஆசைப்படும் மிஸ் சூப்பர் குளோப் இந்தியா !

கேரளாவில் கடந்த வாரம் ‘மிஸ் சூப்பர் குளோப் இந்தியா-2019’ பட்டத்துக்கான அழகிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 22 மாநிலங்களை சேர்ந்த 240 பேர் கலந்துகொண்டனர். இந்த போட்டியில் தமிழகம் சார்பில் சென்னையை சேர்ந்த அக்சரா ரெட்டி (வயது 24) ‘மிஸ் சூப்பர் குளோப் இந்தியா-2019’ பட்டத்தை வென்றார். இதன் மூலம் வரும் அக்டோபர் மாதம் துபாயில் நடைபெறும் ‘மிஸ் சூப்பர் குளோப் வேர்ல்டு-2019’ பட்டத்துக்கான போட்டியில் அக்சரா ரெட்டி இந்தியா சார்பில் பங்கேற்க உள்ளார். இந்த நிலையில் நேற்று சென்னையில் அக்சரா ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது, தமிழ் படங்களில் நடிக்க நான் தயாராக உள்ளேன். ரஜினிகாந்த், அஜித்குமார், விஜய், சூர்யா போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடிக்க ஆசை உள்ளது. பெண்கள் இயற்கையிலேயே அழகானவர்கள். ஆனால் அவர்களில் யார் மிகவும் அழகானவர்கள் என தேர்ந்தெடுக்க அழகிப் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் இவ்வாறாக அக்சரா ரெட்டி கூறினார்.