மும்பையில் ‘பாகுபலி 2’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டீஸர் வெளியீடு

'பாகுபலி' தெலுங்குப் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அப்படத்தின் 2ஆம் பாகம் உருவாகி வருகிறது.  முதல் பாகத்தைவிட மேலும் பிரம்மாண்டமாய் எடுக்கப்பட்டு வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 1 வருடத்திற்கும் மேலாக நடைபெற்றுவருகிறது.இந்நிலையில்,வரும் 20ஆம் தேதியிலிருந்து 27ஆம் தேதி வரை நடைபெற உள்ள 18-ஆவது மும்பை திரைப்பட விழாவில் 'பாகுபலி 2' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர், மேக்கிங் வீடியோ, டீஸர், கிராபிக் நாவல் பிரிவியூ ஆகியவற்றை வெளியிடவிருக்கின்றனர். அக்டோபர் 22ஆம் தேதி மாலை 4 மணியளவில் இந்த நிகழ்வு நடைபெறவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.