மும்பை தாக்குதலில் உயிர் தியாகம் செய்த மேஜர் சந்தீப் வாழ்க்கை படமாகிறது!

தேசிய பாதுகாப்பு படை கமாண்டோ மேஜர் சந்தீப் உன்னி கிருஷ்ணன் இந்த தாக்குதலில் பயங்கரவாதிகளுடன் மோதி தனது உயிரை தியாகம் செய்தவர். இவரது வாழ்க்கை சினிமா படமாகிறது. இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் எடுக்கின்றனர். இந்த படத்துக்கு மேஜர் என்று பெயரிடப்பட்டு உள்ளது. இதில் மேஜர் சந்தீப் வேடத்தில் நடிக்க நடிகர் அத்விக் சேஷ் தேர்வாகி உள்ளார். சசிகிரன் டிக்கா டைரக்டு செய்கிறார். இந்த படத்தை தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு தயாரிக்கிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. அடுத்த வருடம் திரைக்கு கொண்டு வருகின்றனர். படத்தை தயாரிப்பது குறித்து மகேஷ்பாபுவின் மனைவி நர்மதா கூறும்போது, “தேசிய அளவில் கதாநாயகனாக திகழ்ந்த ஒருவரின் வாழ்க்கையை படமாக்குவதில் பெருமைப்படுகிறோம். இது இந்திய படமாக மட்டுமல்லாமல், ஒரு சர்வதேச படமாகவும் இருக்கும்” என்றார்.