முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்?

ரஜினிகாந்தின்  புதிய படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவது உறுதியாகி உள்ளது. முந்தைய படங்களில் விவசாயிகள் பிரச்சினை, அரசியல்வாதிகளின் ஊழல், பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் உள்ளிட்ட பிரச்சினைகளை சொல்லி இருந்தார். ரஜினிகாந்த் படத்திலும் அரசியல் இருக்கும் என்றும், படத்துக்கு நாற்காலி என்ற பெயரை வைக்க பரிசீலிப்பதாகவும் தகவல்கள் பரவின. இந்த நிலையில் படத்துக்கு நாற்காலி என்ற பெயர் வைக்கவில்லை என்று முருகதாஸ் மறுத்துள்ளார்.‘பேட்ட’ படத்தில் ரஜினியின் இளமை தோற்றம் ரசிகர்களை கவர்ந்தது. புதிய படத்திலும் அவரை இளமையாகவே காட்ட முருகதாஸ் திட்டமிட்டு உள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக கீர்த்தி சுரேசை நடிக்க வைக்க பரிசீலிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.