முள்ளும் மலரும் – மகேந்திரனுக்கு உதவிய கமல் !

முள்ளும் மலரும் படத்துக்கு முன்னாடி வசனகர்த்தாவா சினிமால அறிமுகம். நிறைய படங்கள் பண்ணினேன். ஒருகட்டத்துல சினிமாவே வேணாம்னு முடிவு பண்ணினேன். அப்போ ஆழ்வார்பேட்டைல இருக்கிற கமல் சார் வீட்டுக்கு அடிக்கடி போய் பேசிட்டிருப்போம். ஒருவழியாக முள்ளும் மலரும் படத்தை எல்லாம் எடுத்து முடிச்சாச்சு, சின்னதா ஒரு பேட்ச் அப் ஒர்க் பண்ணனும்னு தோணுச்சு. ஒரேயொரு சீன் எடுத்து சேர்த்தா சரியா இருக்கும்னு நினைச்சேன். ஆனா வேணு செட்டியார் இதுக்குமேல ஒரு சீன் கூட எடுக்க செலவு பண்ணமாட்டேன்னு சொல்லிட்டார் கறாரா சொல்லிட்டார். ஆனா அந்த லீட் சீன் இருந்தாத்தான், செந்தாழம்பூவே பாட்டை பயன்படுத்த முடியும். அந்தப் பாட்டை நீங்க பயன்படுத்துங்க பயன்படுத்தாம் விடுங்க அதைப்பத்தி எனக்கொன்னும் தெரியாது ஆனா இதுக்கு மேல செலவு பண்ணமாட்டேன்’னு உறுதியா இருந்தார். கமல் வேணு செட்டியார்கிட்ட பேசினார். என் தரப்பு விஷயங்களின் நியாயங்களைச் சொன்னார். ஆனா அவர் கேக்கவே இல்ல அப்படீன்னா பரவாயில்ல செட்டியார் அந்த ஒரு சீனுக்கு என்ன செலவோ அதை நான் தரேன். அந்த செலவை நான் ஏத்துக்கறேன்’ன்னு சொன்னார் கமல். மறுநாளே அந்தக் காட்சி எடுக்கப்பட்டது. அன்னிக்கி முள்ளும் மலரும் படத்துக்கு கமல் இந்த அளவுக்கு எனக்கு ஹெல்ப் பண்ணலைன்னா, அதுக்குப் பிறகு நான் டைரக்டராவே ஆகியிருக்கமாட்டேன். என்னைப் பொருத்தவரை கமல், மகா கலைஞன். மகா மனிதன் இப்படி இயக்குநர் மகேந்திரன் கமல்ஹாசனை இன்றைக்கும் புகழ்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறார்.