மெட்ரோ ரெயில் பால கான்கிரீட் கல் விழுந்து விபத்து – நூலிழையில் உயிர் தப்பிய நடிகை !

டெல்லியில் பிறந்து படித்த அர்ச்சனா கவி டிவி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கியபோது மலையாள இயக்குநர் லாஸ் ஜோஸ் கண்ணில் பட்டு நடிகையானார். அவர் தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து வருகிறார். கேரளாவை பூர்வீகமாக கொண்ட அர்ச்சனா கவி கொச்சியில் உள்ள விமான நிலையத்திற்கு காரில் சென்றுள்ளார். அப்பொழுது கொச்சி மெட்ரோ ரெயில் தூணில் இருந்து கான்கிரீட் ஸ்லாப் (கல்) ஒன்று அவர் கார் மீது விழுந்தது. இதில் அர்ச்சனா கவி சென்ற கார் சேதமடைந்தது. நல்ல வேளையாக அவருக்கோ, டிரைவருக்கோ எதுவும் ஆகவில்லை. இருப்பினும் இந்த சம்பவத்தால் அர்ச்சனா கவி அதிர்ச்சி அடைந்தார்.