மென்மையான வாய்ஸில் ரஜினிகாந்த் டப்பிங் !

முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தின் டப்பிங் 15-ம் தேதி துவங்குகிறது. இப்படத்தில் ரஜினி காவல் துறை அதிகாரி மற்றும் சமூக சேவகர் என இரு வேடத்தில் தோன்றுவதாக செய்திகள் வெளியாகின. ஆனால், ஒரே வேடத்தில் தான் ரஜினி நடிக்கிறார். அதே நேரம், பிளாஷ் பேக் காட்சியில், வித்தியாசமான தோற்றத்தில் வருகிறார். அதற்கேற்ப, தன் வழக்கமான பாணியில் இல்லாமல், மென்மையான குரலில், பேசப்போவதாக கூறுகிறது படக்குழு.