“மெரினா புரட்சி” என்ற தலைப்பில் படம் உருவாக உள்ளது.

பாண்டியராஜன் நிறுவனம் தயாரிப்பில், எம்.எஸ்.ராஜ் இயக்கவுள்ள படத்தின் தலைப்பு “மெரினா புரட்சி” இந்த தலைப்பில் தெரிகிறது கடந்த ஆண்டு மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்ட புரட்சியை பற்றியது என்று. ஏற்கனவே இன்று மாலை இந்த படத்தின்  தலைப்பு அறிவிக்கப்படும் என செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் வேல்ராஜ் ஒளிப்பதிவாளராகவும், அல்ருபியான் இசையமைப்பாளருமாக இருக்கிறார்கள். தீபக் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகவுள்ளது. இந்த படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூகவலையத்தளத்தில் இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளார்.