மெர்சல் தயாரிப்பாளர் கொடுத்த ஸ்பெஷல் சர்ப்ரைஸ் – விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்.

அட்லீ இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் தயாராகி வரும் படம் 'மெர்சல்'. இப்படம் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இதில் படத்தின் டப்பிங் வேலைகள் தொடங்கிவிட்டது. மற்றும்  இப்படத்தின் அப்டேட் குறித்து தயாரிப்பாளர் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். இதில் ’ஆடி வெள்ளி இந்த வருடம் செம்ம ஸ்பெஷலாக ஆகவிருக்கின்றது, மெர்சல் அப்டேட் நாளை வரவுள்ளது’ என டுவிட் செய்தார். இதை பார்த்த விஜய் ரசிகர்கள் அனைவரும் கொண்டாட்டத்தில் உள்ளனர். பலரும் மூன்றாவது லுக் வருமா? இசை வெளியீட்டு விழா குறித்து வருமா? என ஆவலுடன் காத்திருக்கின்றனர்.