மெர்சல் படத்தின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூலில் எவ்லோவு தெரியுமா?

தீபாவளிக்கு வெளியாகிய விஜய்யின் படம் “மெர்சல்”,  வசூலில் மாஸ் காட்டி வருகிறது. தற்போது இப்படம் “அதிரிந்தி” என்ற பெயரில் தெலுங்கில் நேற்று வெளியாகியுள்ளது. இப்போது வரைக்கும் சென்னையில் மட்டும் ரூ. 12.39 கோடி வசூல் செய்து ரஜினியின் கபாலி (ரூ. 12.35 கோடி) பட சாதனையை முறியடித்துள்ளது. முதல் இடத்தில் இருக்கும் பாகுபலி 2 படம் ரூ. 18.85 கோடி வரை வசூலித்துள்ளது. கூடிய விரைவில் விஜய்யின் மெர்சல் சென்னை பாக்ஸ் ஆபிஸில் முதல் இடத்தை பிடிக்கும் என்று ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர்.