மெர்சல் படத்தில் நடிப்பதற்கு இந்த நிகழ்வு தான் முக்கிய காரணம்! எஸ்.ஜே.சூர்யா

விஜய்யின் நடிப்பில் அட்லீயின் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் மெர்சல். காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் என 3 கதாநாயகிகள் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்திருந்தார். மேலும் விஜய்யும் தந்தை, 2 மகன்கள் என மூன்று கேரக்டர்களில் நடித்திருந்தார். இப்படத்தின் கதையை அட்லீ சொன்னப்போது நடந்த நிகழ்வை எஸ்.ஜே.சூர்யா கூறுகையில், அவர் கதையை சொன்னப்போது தந்தை மகன் இருவரையும் பழி வாங்கும் கதையாக இருக்க கூடாது எண்ணிக்கொண்டே இருந்தேன்.ஆனால் படத்தின் கதை அதுபோலவே இருந்ததால், அட்லீயிடன் என்ன சார் என கேட்டேன். அவர் உடனே நான் படத்தின் ஒரு காட்சியை மட்டும் சொல்கிறேன் பிடித்திருந்தால் பண்ணுங்க சார் என கூறினார். 30 வருஷம் கழிச்சி உன்ன வந்து அழிப்பேன் என்ற வரியை சொன்னது மட்டுமில்லாமல் நடித்தும் காட்டினார் அட்லீ என்றார்.