மேடம் டூ சாட்ஸ் அருங்காட்சியகத்தில் காஜலுக்கு கிடைத்த பெருமை !

நடிகை காஜல் அகர்வாலுக்கு சிங்கப்பூரில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகைகளிலே இவருக்கு தான் முதன்முதலில் மெழுகு சிலை நிறுவியுள்ளது. முன்னதாக சிலைக்கு அளவுக்கு எடுக்க மேடம் டுசாட்ஸ் ஆட்கள் வந்தபோது எடுத்த புகைப்படங்களை காஜல் சமூக வலைதளத்தில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். காஜல் அகர்வால் தன் பெற்றோர், தங்கை நிஷா அகர்வால் மற்றும் குடும்பத்தாருடன் கலந்து கொண்டு தன் சிலையை திறந்து வைத்தார்.