‘மே ஐ கம் இன்!’ – அசத்தலான கதிரின் சத்ரு டிரெய்லர்!

கதிர், சிருஷ்டி டாங்கே நடிப்பில் வருகிற மார்ச் மாதம் 8 ம் தேதி ரிலீஸாக இருக்கும் படம் `சத்ரு'. பரியேறும் பெருமாள், சிகை, எனப் பல வகை கேரக்டர்களை முயற்சி செய்து பார்க்கும் கதிர், இம்முறை போலீஸ் அவதாரம் எடுத்துள்ளார். நவீன் நஞ்சுண்டான் இயக்கத்தில் அம்ரீஷ் இசையில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில், பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜாவாருணி, பவன் ஆகியோர் நடித்துள்ளனர்.'ராட்டினம்' படத்தில் கதாநாயகனாக வந்த லகுபரன், இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக வரும் கதிர், யார் கண்ணிலும் படாமல் தலைமறைவாக வாழும் வில்லன் என முன்னோட்டம் முழுக்க விறுவிறுப்பாகச் செல்கிறது.