மே-1ஆம் தேதி தல அஜித் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி!

மே-1ஆம் தேதி உழைப்பாளர் தினத்தில் தல அஜித் பிறந்தநாளை உலகம் முழுவதும் தல ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடுவார்கள். அதுபோல இந்த வருடமும் மிக சிறப்பாக அஜித்தின் பிறந்தநாளை கொண்டாட திட்டமிட்டிருக்கும் அவர்களுக்கு இன்ப செய்தியாக தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அஜித்தின் பிறந்தநாளான மே-1ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு சன் டிவியில் அஜித்தின் நடிப்பில் இந்த வருட தொடக்கத்தில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த விஸ்வாசம் படத்தை திரையிடவுள்ளனர். இந்த தகவலை சன் டிவி நிர்வாகம் வெளியிட்டதில் இருந்து தல ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.