மே 5-ல் ரிலீஸ் ஆகும் இளையராஜா இசையில் அடுத்த படம் ‘எங்க அம்மா ராணி’

'இசைஞானி' இளையராஜா  இசையில்  எஸ். பாணி இயக்கியிருக்கும் படம், ‘எங்க அம்மா ராணி’.  இந்த படத்தில் தன்ஷிகா, நமோ நாராயணன் உட்பட பலர் நடித்துள்ளனர். எம்.கே ஃபிலிம்ஸ் சார்பில் சி.முத்துகிருஷ்ணன் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில், இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தாயாக தன்ஷிகா நடித்துள்ளார்.இந்த படம் மே 5 ம் தேதி ரிலீஸ் ஆகஇருக்கிறது.