மைக்கேல் ராயப்பன்: சிம்பு மீது புகார்…..

மைக்கேல் ராயப்பன் தயாரித்த, “அன்பானவன் அசராதவன் அடங்காதவன் “படத்தில்  சிம்பு நடித்தார். அந்த படம் கடந்த வாரம் திரைக்கு வந்துள்ள நிலையில் தயாரிப்பாளர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். அதில் சிம்பு படப்பிடிப்பிற்கு ஒழுங்காக வரவில்லை என்றும், அதன் இரண்டாம் பாகத்தில் நடித்தும் தருவதாக வாக்குறுதி அளித்து அதிலும் நடிக்கவில்லை என்றும், இதனால் 20 கோடி ரூபாய் நஷ்டம் என்றும் குற்றம் சாட்டி  இருந்தார். இதனால் நடிகர் சங்கம் சிம்புவிற்கு நோட்டிஸ் அனுப்பி விளக்கம் கேட்டதற்கு, அவர் தன் மீது பொய்யான குற்றசாட்டு சுமத்தியிருக்கிறார் என்றும்,படம் திரைக்கு வந்த பிறகு குற்றம் சாட்டப்பட்டு உள்ளது என்றும் விளக்கம் அளித்துள்ளார். இந்த விளக்கத்தை நடிகர் சங்கம் தயாரிப்பாளருக்கு அனுப்பியுள்ளது. இதனால் அவர் விளக்கத்தை ஏற்பதா? அல்லது நடவடிக்கை எடுப்பதா ? என்று ஆலோசனை நடத்தி வருகிறது. அவரிவிடம் நடிகர் சங்கம் நேரில் விசாரணை நடத்தி உள்ளது. தற்போது அவர் மணிரத்னம் இயக்கும்  படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த படம் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் இடையூறு செய்வதாகவும் இந்த படத்தை ஏன்  நிறுத்த நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை  என கூறியுள்ளார். இந்த பிரச்சனைக்கு விரைவில் முடிவு எடுக்கப்படும்  என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.