மோகன்லாலை வைத்து இயக்கிய பிரித்விராஜ்!

மலையாளத்தில் மோகன்லால் நடித்து விரைவில் வெளியாகவுள்ள படம் லூசிபர். இப்படத்தை நடிகர் பிரித்விராஜ் இயக்கியுள்ளார்.இந்த படத்தில் மஞ்சு வாரியர், தொவினோ தாமஸ், இந்திரஜித் சுகுமாரன், விவேக் ஓபராய் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். அரசியல் திரில்லர் கதைக்களம் கொண்ட இந்தப் படம் வர்த்தக அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் உலகம் முழுவதும் மார்ச் 28-ந்தேதியன்று வெளியாக உள்ளது. மலையாளத்தில் மட்டுமல்லாமல், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் இந்தப் படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.