மோகன்லால் இயக்கத்தில் இசையமைப்பாளரான லிடியன் நாதஸ்வரம் !

உலகளவில் நடைபெற்ற ‘தி வேல்ர்ட்'ஸ் பெஸ்ட்' (The World's Best) என்ற நிகழ்வில், தன் பியனோ இசைத் திறமையால் டைட்டில் வென்று, சர்வதேச அரங்கில் மிளிர்ந்தவர் 13 வயதே ஆன லிடியன் நாதஸ்வரம். தமிழகத்தைச் சேர்ந்தவரான சிறுவன் லிடியன் இசை பயின்றது சென்னையிலுள்ள ஏ.ஆர்.ரஹ்மானின் கே.எம். மியூசிக் கன்சர்வேட்டரி. இதற்கிடையே, தொடர்ந்து தனது செயல்பாடுகளால் கவனம் ஈர்த்துவந்த சிறுவன் லிடியன் தற்போது ஒரு திரைப்படத்தில் இசையமைப்பாளராக கமிட்டாகியுள்ளார். அதுவும் மலையாள சினிமாவில் அங்கு முன்னணி நடிகரான மோகன்லால் முதல்முறையாக 'பரோஸ்' படத்தின் மூலம் இயக்குநராக மாறவுள்ளார். பல மொழி திரைப்படமாக அவர் இயக்கும் இந்தப் படம் 3D தொழில்நுட்பத்தில் தயாராக உள்ளது. மிகவும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ள இந்தப் படத்துக்குதான் லிடியன் இசையமைக்க கமிட்டாகியுள்ளார்.