மோகன்லால் படத்தில் பிரபல நடிகரின் தம்பி !

‘ப்ரண்ட்ஸ்’, ‘எங்கள் அண்ணா’, ‘காவலன்’, ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ போன்ற சில படங்களை இயக்கியவர் சித்திக். தற்போது மோகன்லாலை வைத்து ‘பிக் பிரதர்’ எனும் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் சல்மான் கானின் தம்பியான அர்பாஸ் கான் நடிக்கிறார். ‘மலையாள சினிமா லெஜண்ட் மோகன் லாலுடன் நடிக்கப்போவதும், சித்திக் போன்றவர் இயக்கத்தில் நடிப்பதும் எனக்குப் பெரும் மகிழ்ச்சி. முதல் முறையாக ‘பிக் பிரதர்’ படம் மூலம் மலையாள சினிமாவுக்கு வருகை தருகிறேன். ஷூட்டிங் வரும் ஜூலை மாதம் தொடங்குகிறது’ என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் அர்பாஸ்கான்.