மோகன் ராஜா இயக்கத்தில் அஜித் நடிக்க ஒப்புக்கொள்வாரா ?

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படம் சூப்பர் ஹிட்டாக 3 வாரம்  திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த இயக்குனருக்கு விரைவில் அஜித் படத்தை இயக்க வாய்ப்பு உள்ளதாக செய்தி வெளியாகிறது. இதனால் ரசிகர்கள் இவரிடம் அஜித்தை இயக்க வாய்ப்பு கிடைத்தால் சமூக கதை, நெகட்டிவ் கதை அல்லது கமர்ஷியல் கதையில் எதை தேர்வு செய்விர்கள் என்று கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் அஜித் நடிக்க ஒப்புக்கொண்டால் நெகட்டிவ் கதையில்  இயக்குவேன்.  அவர் நடித்த பில்லா,மங்காத்தா ஆகிய  படங்கள் சூப்பர் ஹிட் ஆனது இந்த படத்தையும் நெகட்டிவ் கதையில் எடுத்தால் சூப்பர் ஹிட் படமாக நிச்சயமாக அமையும் என கருதப்படுகிறது. ஏற்கனவே  இவர் இயக்கத்தில் விஜய் நடித்த வேலாயுதம் படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது போல் அஜித் படமும் சூப்பர் ஹிட் படமாக அமையும்  என்று நம்புவோம்.