மோகன் ராஜா இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு இசையமைப்பாளர்!

அட்லீ இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிப்பதாக தகவல்கள் வந்துள்ளது. விஜய்யின் அடுத்த படம் இயக்குனர் மோகன் ராஜா என்பது உறுதியாகியுள்ள நிலையில், இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மீண்டும் தளபதியுடன் கூட்டணி சேரவுள்ளார் என கூறப்படுகிறது. இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.