மோகன் லாலுக்கு ஜோடியாகும் திரிஷா !

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. விஜய், அஜித், ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடனும் நடித்து வரவேர்பை பெற்றவர். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களிலும் தற்போத அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு, ஹே ஜுடு படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமான திரிஷா, தற்போது மேலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் மோகன் லால் நடிக்கும் புதிய படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கவுள்ளார். இப்படத்தை கமல் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற் பாபநாசம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்க உள்ளார். பெயரிடப்படாத இப்படத்தை எகிப்து, லண்டன், கனடா, கேரளா, டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. த்ரிஷா நடிப்பில் ‘கர்ஜனை', ‘சதுரங்க வேட்டை2', ‘பரமபதம் விளையாட்டு', ‘ராங்கி', ‘ சுகர்' ஆகிய படங்கள் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.