மோடியை விமர்சித்து பேசியுள்ள நடிகர் சித்தார்த் – பேசியது எல்லாமே பொய்!

நடிகர் சித்தார்த் அடுத்து கமலஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார். சினிமாவில் கவனம் செலுத்துவதுமட்டுமின்றி சித்தார்த் அடிக்கடி சமூக பிரச்சனைகள் பற்றியும் தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இன்று அவர் பிரதமர் மோடி பேசியுள்ளதை விமர்சித்து பேசியுள்ளார்.”பாலியல் பலாத்கார வழக்குகளில் 3, 7, 11 முதல் 30 நாட்களில் தூக்கில் ஏற்றப்படுகிறார்கள்” என மோடி பேசியுள்ளார். அது எல்லாமே பொய் என சித்தார்த் மோடியை தாக்கி பேசியுள்ளார்.