‘யங் மங் சங்’ படத்தில் குங்பூ மாஸ்டராக பிரபுதேவா!

டான்ஸ் மாஸ்டராகவும் இயக்குநராகவும் இருக்கும் பிரபுதேவா, லட்சுமி மேனனுக்காக இப்பொழுது குங்பூ மாஸ்டராக அவதாரம் எடுத்துள்ளார்.  தற்போது கும்பகோணம் பகுதியில் படப்பிடிப்புகள் தீவிரமாக நடந்து வருகிறது. கும்பகோணத்திலிருந்து சீன தம்பதிகளுக்கு தத்து கொடுக்கப்படும் பிரபுதேவா, அங்கு படித்து பெரிய குங்பூ மாஸ்டர் ஆகிறார். அதன்பிறகு தனது ஒரிஜினல் பெற்றோர்களை தேடி கும்பகோணம் வரும் அவர், இங்கு அவர்கள் ஒரு பிரச்சினையில் இருப்பதை அறிகிறார்.

அதனை தீர்த்து வைத்து மாமன் மகள் லட்சுமி மேனனையும் காதலிப்பது மாதிரியான கதை என்கிறார்கள். இந்தப் படத்தில், பிரபுதேவாவின் அப்பாவாக தங்கர்பச்சான் நடிக்கிறார். மேலும், படத்தில் ஆர்.ஜே.பாலாஜி, கும்கி அஸ்வின், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.