யாருடனும் என் நடிப்பை ஒப்பிட்டு பார்க்காதீர்கள் – அனுபமா பரமேஸ்வரன் வேண்டுகோள் !

நானி, நிவேதா தாமஸ் நடித்த தெலுங்கு படம் நின்னு கோரி. இந்த படம் தமிழில் ரீமேக் ஆகிறது. கண்ணன் இயக்கத்தில் அதர்வா ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். இந்த பட ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கியது. இது குறித்து அனுபமா பரமேஸ்வரன் கூறும்போது, ‘கொடி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தேன். அதன்பிறகு நல்ல வாய்ப்பாக இந்த படம் அமைந்துள்ளது. நிவேதா தாமஸ் ஒரிஜினலில் சிறப்பாக நடித்திருந்தார். நான் எப்படி நடித்தாலும் அவரோடு ஒப்பிடுவார்கள். ஆனால், எனது நடிப்பு பாணியிலேயே நான் நடிப்பேன். படத்தில் பரதநாட்டிய கலைஞராக நடிக்கிறேன். கிளாசிக்கல் நடனம் கற்றதால் இந்த வேடம் எனக்கு பிளஸ்ஸாக அமையும். சரியான தருணத்தில் எமோஷனை வெளிப்படுத்தும் விதமான கேரக்டர் இது. அது புரிந்து நடித்து வருகிறேன்’ என்றார்.