Cine Bits
யாரையும் வற்புறுத்தி வாய்ப்பு கேட்டு பாடமாட்டேன் – ரம்யா நம்பீசன் !
ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் நடிப்பில் பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ள படம், பிளான் பண்ணி பண்ணணும். இந்தப் படத்துக்காக யுவன்சங்கர்ராஜா இசையில் நிரஞ்சன் பாரதி எழுதிய ஒரு பாடலை ரம்யா நம்பீசன் பாடியுள்ளார். அவர் கூறுகையில், ‘மலையாளத்திலும், தமிழிலும் சில பாடல்கள் பாடியிருக்கிறேன். நான் நடிக்கும் படம் என்றாலும், மற்றவர் படமாக இருந்தாலும், குரல் வளத்துக்கு பொருத்தமான பாடலாக இருந்தால் மட்டுமே பாடுவேன். நான் நடிக்கக்கூடிய படத்தில், கண்டிப்பாக என்னை பாட வைக்க வேண்டும் என்று இயக்குனருக்கோ அல்லது இசை அமைப்பாளருக்கோ உத்தரவு போடுவது இல்லை. யாரையும் வற்புறுத்தி வாய்ப்பு கேட்டு பாடக்கூடாது என்பது என் கொள்கை. இளையராஜா இசையில் பாட வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. தற்போது அவர்இசை அமைத்துள்ள தமிழரசன் என்ற படத்தில், விஜய் ஆண்டனியின் ஜோடியாக நடிக்கிறேன்’ என்றார்.