யுவனின் 125 படம்.

யுவன் சங்கர் ராஜா 1997 ஆம் ஆண்டு அம்மா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் திரைப்பக்கல்லூரி மாணவரான நாகராஜன் இயக்கத்தில்  சரத்குமார், நக்மா ,நடித்த “அரவிந்தன்”  படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதன் பிறகு பல வெற்றி படங்களுக்கு இசையமைத்த இவர் 100 வது படமாக, கார்த்தி நடித்த பிரியாணி படத்தில் இசையமைத்தார்.  தற்போது பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில், விஷால் நடித்த இரும்புத்திரை,  இவர் இசையில் உருவான 125 வது  படம். இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா அண்மையில் சென்னை சத்யம் திரையரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் தான்  இரும்புத்திரைபடம் யுவனின் 125 படம் என அறிவிக்கப்பட்டது.