யோகா பயிற்சி எடுக்கும் தமன்னா…

நடிகை தமன்னா ஐதராபாத்தில் உள்ள பாரத் தாகூர் யோகா பயிற்சி மையத்தில் ருஷீ என்ற யோகா மாஸ்டரிடம் பயிற்சி எடுத்து வருகிறார். அவர் இதுபற்றி “நான் எப்போதுமே குழந்தைத்தனமாக இருப்பேன். ஆனால் யோகா பயிற்சிக்கு பிறகு ரொம்பவே மாறி விட்டேன். அந்த பயிற்சி மையத்தில் ருஷீ மாஸ்டர் எனக்கு அவ்வப்போது முறையான யோக பயிற்சி கொடுத்து என்னை உடலளவில் மட்டுமின்றி மனதளவிலும் உற்சாகமாக வைத்துக்கொள்வது எப்படி என்பதை சொல்லிக் கொடுத்துள்ளார். பாகுபலி படத்தில் நடித்து வந்த போதுதான் மாஸ்டரின் நட்பு கிடைத்து அதிலிருந்து யோகா பயிற்சி எடுத்து வருகிறேன் என்றும், யோகா பயிற்சி எடுத்த பிறகு தான் நான் அதிஷ்டசாலியாக உணர்கிறேன், எவ்வளவு பிசியாக இருந்தாலும் யோகா செய்வதை தவறுவதில்லை” என்று கூறியுள்ளார்