யோகிபாபு, கருணாகரன் நடிக்கும் சயின்ஸ்பிக்ஷன் படத்தில் சுனைனா !

யோகி பாபு, கருணாகரன் இணைந்து நடிக்க உள்ள சயின்ஸ்பிக்ஷன் டார்க் காமெடி படமான ட்ரிப் படம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இப்படத்தில் இளமையும், உற்சாகமும் இணைந்த இளம் நாயகி சுனைனா கதைநாயகனாக அறிமுகமாகும் பிரவீனுக்கு நாயகியாக நடிக்க உள்ளார். நாயகன் பிரவீன் சமீபத்தில் அதர்வா நடிப்பில் வெளியான 100 படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து தன் திறமையான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். தற்போது கதை நாயகனாக இப்படத்தில் மூலம் அறிமுகமாகிறார். சுனைனா பற்றி இயக்குநர் டென்னிஸ் கூறும்போது, ‘சுனைனாவின் கதாப்பாத்திரம் மிகவும் சவால் வாய்ந்த ஒன்று. இப்படத்தில் அவருக்கு உணர்ச்சிமிகுந்த பல சவாலான தருணங்கள் உள்ளது. இந்தக் கதாப்பாத்திரத்தில் முன்னணி ஹிரோயின்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று பலரை அணுகினோம். ஆனால் யாரும் ஒரு அறிமுக ஹீரோவுடன் ஜோடி சேர விரும்பவில்லை. ஆனால் சுனைனா கதையை கேட்டவுடன் கதையின் மையத்தை உணர்ந்து உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டார். இப்படம் அவரின் சினிமா வாழ்வில் முக்கியமானதாக இருக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு வலுவாக இருக்கிறது’ என்றார். இப்படத்தை சாம் ஆண்டனியிடம் உதவியாளராக இருந்த இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் எழுதி இயக்குகிறார். சிவப்பு மஞ்சள் பச்சை படம் மூலம் புகழ் பெற்ற இசையமைப்பாளர் சித்து குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார். உதய சங்கர் ஒளிப்பதிவை மேற்கொள்ள தீபக் எடிட்டிங் செய்கிறார்.