யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள தர்ம பிரபு படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

கன்னிராசி படத்தை இயக்கிய முத்துகுமரன் அடுத்ததாக இயக்கிவரும் படம் தர்மபிரபு. முழுநீள நகைச்சுவை படமாக உருவாகும் இந்தப் படத்தில் யோகிபாபு எமனாகவும், ராதாரவி அவருடைய தந்தையாகவும் நடிக்கிறார். எமலோகத்தில் எமன் பதவி முடிவடையும் நிலையில் புதிய எமனை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடக்கிறது. வாரிசு அடிப்படையில் யோகி பாபு போட்டியிடுகிறார். இதற்குள் நடக்கும் போட்டியை காமெடி கதையாக பேசுகிறது தர்ம பிரபு. நடிகை ஜனனி ஐயர் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். ரமேஷ் திலக் சித்திரகுப்தனாக நடிக்கிறார். இந்தப் படத்துக்காக எமலோகத்திற்கான படப்பிடிப்பு தளத்தை ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பிரம்மாண்டமாக அமைத்து படமாக்கி வந்தனர் படக்குழுவினர். ஸ்ரீவாரி பிலிம்ஸ் சார்பில் ரங்கநாதன் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்ய, ஜஸ்டீன் பிரபாகரன் இசையமைக்கிறார். மேலும் டீசரில், இங்கு எல்லோரும் தகுதியுடன் தான் பதவியில் இருக்கிறார்களா அம்மா போனால் சின்னம்மா, ஐயா போனால் சின்னையா, அக்கவுண்டில் பணம் போடுகிறேன் என்று சொல்லிவிட்டு ஆடைகளாக போட்டுக் கொண்டிருக்கிறாரா?” என்ற அரசியல் நய்யாண்டி வசனங்களும் இடம்பெற்றுள்ளன.