ரகுல் பிரீத் சிங் 2018ல் இரு படங்களுக்கு ஒப்பந்தமாகி உள்ளார்.

ரகுல் பிரீத் சிங், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபுடன் இணைந்து நடித்த படம் ஸ்பைடர். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகி ரகுல் பிரீத் சிங்  பெரிய மார்க்கெட்டை தரும் என்று எதிர்பார்த்தார். ஆனால் அந்த படம் பெரிய  தோல்வியை  தந்தது. இதனால் இந்த இயக்குனர் விஜய் நடிக்கும்  படத்தில்  இவரை கைகழுவிவிட்டார். 2018ல்  இவர், சூரியா நடிக்கும் முதல் படத்தில்  கையெழுத்திட்டுள்ளார். அதேபோல் தெலுங்கில் வம்சி இயக்கத்தில் மீண்டும் மகேஷ்பாபுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்க உள்ளார். தீவிர பேச்சுவார்த்தையில் இருந்த படங்கள் பின்வாங்கினாலும், இவருக்கு 2018ல் இரண்டு பெரிய மார்க்கெட் உள்ள நடிகர்களுடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளது.