ரகுவரன் ஒரு இசையமைப்பாளர் !!!

ரகுவரன் தமிழ் சினிமாவில் மறக்க முடியாத ஒரு நடிகர். அவர் கதாநாயகன்,வில்லன்,குணச்சித்ரம் என நடித்துள்ளார். இதுவரை இவரை பற்றி தெரியாத அபூர்வம் சிறந்த இசை கலைஞர் என்று. அவர் லண்டன் டிரினிட்டி இசை கல்லூரியில் பியானோவில் தேர்ச்சி பெற்றவர். இவர் பாடிய சில பாடல்களை தொகுத்து “ரகுவரன் எ மியூசிக்கல்  ஜர்னி” என்ற பெயரில் ஆல்பம் ஓன்றை ரஜினிகாந்த் வெளியிட, ரகுவரன் மகன் ரிஷிவரன் பெற்று கொண்டார். ரோகிணி “என் கணவர் பாடி, இசையமைத்து வைத்ததில் ஐந்து பாடல்களை மட்டும் ஆல்பமாக தொகுக்க முடிந்தது. இவரும் இவரது நண்பர் ராஜன் சர்மாவும் இணைந்து  நிறைய மியூசிக்கல்  பிட்ஸ்  உருவாக்கியுள்ளனர். நடிப்பு, இசை இதை தவிர ஆன்மிகத்திலும் நாட்டம் உள்ளவர். அவர் சாய்பாபாவின் தீவிர பக்தர். அவர் ஷுட்டிங் முடித்து நேராக வீட்டுக்கு வந்து விடுவார், பார்டி போன்று  எதிலும் கலந்துகொள்ள மாட்டார். கதை சொல்பவர்கள் வீட்டிற்கு வந்து தான் சொல்லுவார்கள். அவர் வீட்டில் இருக்கும் போது பியோனோதில் தான்  இசையமைத்து கொண்டிருப்பார் என்றும், எனது மகன் ரிஷிவரன் (19) அமெரிக்க அட்லாண்டாவில் உள்ள எமிரி பல்கலைக்கழகத்தில் பிரீ -மெடிக்கல் இரண்டாம் ஆண்டு படிக்கிறார்.அவர் புகைப்படம் எடுக்க வேண்டும் என்றாலே அச்சப்படுவார். ஆல்பம் வெளியிடும் போது  நீயும் வர வேண்டும் என்று அழைத்து சென்றேன். ரஜினியும் சில அறிவுரைகளை வழங்கினார். அவரின் புகைப்படம் வெளியானதில் இருந்து தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என போன் செய்து எப்போது அவர் நடிப்பார் என்று கேட்கிறார்கள். அவர் இப்போதைக்கு நடிக்க மாட்டார். அவரின் லட்சியம் டாக்டர் ஆக வேண்டும் என்பதே” என்று கூறியுள்ளார்.