ரங்கராஜ் பாண்டேவின் ரோல் இதுதான் வெளியான தகவல்- தல59!

ஹிந்தியில் அமிதாப் பச்சன், டாப்ஸி உள்ளிட்டோர் நடித்த பிங்க் படத்தை தற்போது அஜித் நடிப்பில் தமிழில் ரீமேக் செய்கிறார் போனி கபூர், எச் வினோத் இயக்கிவரும் இந்த படத்தில் பிரபல தொகுப்பாளர் ரங்கராஜ் பாண்டே முக்கிய ரோலில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. அதை அவரும் உறுதி செய்தார். இந்நிலையில் அவரின் ரோல் என்ன என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அமிதாப் பச்சன் நடத்த வக்கீல் ரோலில் அஜித் நடிக்க, அவரது எதிர்தரப்பு வக்கீலாக ரங்கராஜ் பாண்டே நடிக்கிறார். சின்னத்திரைப் பேட்டிகளில் அரசியல் பிரபலங்கள் பல கிடுக்கிபிடி கேள்விகள் கேட்பவர் பாண்டே. அவர் இந்த ரோலில் நடித்தால் அழுத்தமாக இருக்கும் என படக்குழு பாண்டேவை நெகட்டிவ் ரோலில் நடிக்கவைக்க முடிவெடுத்துள்ளது.