ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தருவதே என் நோக்கம் – இலியானா !

தமிழில் நண்பன் படத்தில் விஜய் ஜோடியாக நடித்துள்ள இலியானா இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு, ஒவ்வொரு படத்திலும் ரசிகர்களை வியக்க வைக்கும்படி நடிக்க வேண்டும். இன்ப அதிர்ச்சியை கொடுக்க வேண்டும் என்பதுதான் எனது லட்சியமாகவும் ஆசையாகவும் உள்ளது. ஜான் ஆபிரகாமுடன் நடித்துள்ள இந்தி படம் திரைக்கு வர உள்ளது. இதில் முழுமையான காமெடி கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறேன். ஏற்கனவே முபாரகான் என்ற படத்தில் முதல் தடவையாக நகைச்சுவை வேடத்தில் நடித்தேன். என்னை பற்றி சிந்திக்கும்போது போது ரசிகர்களுக்கு நகைச்சுவை மனதில் வராது. இலியானா கவர்ச்சியான நடிகை என்றுதான் நினைப்பார்கள். ஆனால் முதல் தடவையாக முபாரகான் படத்தில் காமெடியில் நடித்ததும் உங்களை இப்படி பார்த்து அதிர்ச்சி அடைந்தோம் என்று சொன்னார்கள். அந்த மாதிரி ஒரு இன்ப அதிர்ச்சியை ரசிகர்களுக்கு அடிக்கடி கொடுக்க வேண்டும் என்பது எனது ஆசை இவ்வாறு இலியானா கூறினார்.