ரசிகர்களுக்கு ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்!

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானுக்கும், நடிகர் ராகவா லாரன்சுக்கும் இடையே கடந்த சில நாட்களாக பிரச்சினை நிலவி வருகிறது. சீமானுக்கு ஆதரவாக சிலரும், லாரன்சுக்கு ஆதரவாக சிலரும் பேசி வருகிறார்கள். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி லாரன்ஸ் மீது கடும் விமர்சனங்களை அவர் முன்வைத்து வருகிறார். இதற்கு ரசிகர்கள், திருநங்கைகள் ஒன்றுகூடி லாரன்சுக்கு ஆதரவாக பேட்டி கொடுத்தனர். இந்நிலையில் தன் மீது அவதூறு பரப்புபவர்கள் பற்றி கவலை பட வேண்டாம் என ரசிகர்களுக்கு லாரன்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாகவது, காஞ்சனா 3 படத்தை மாபெரும் வெற்றிப் படமாக்கிய ரசிகர்களுக்கு மிக்க நன்றி. ரசிகர்கள் மாற்றுத்திறனாளிகள் திரு நங்கைகள் மற்றும் ரசிகர்களுக்கு ராகவா லாரன்ஸின் அன்பு வேண்டுகோள். என்னை பற்றியும் எனது சேவைகளை பற்றியும் அவதூறு பேசுபவர்களை பற்றி கவலைபடவேண்டாம். நமக்கு கெடுதல் நினைப்பவர்களுக்கும் நாம் நல்லது நடக்க ஆண்டவனை பிரார்த்திப்போம். நம்மை பற்றி புரிந்து கொள்ள ஆண்டவன் அருள் அவர்களுக்கு கிடைக்கட்டும். இவ்வாறு ராகவா லாரன்ஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.